திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 17 ஜனவரி 2018 (17:11 IST)

இந்தியாவின் தலைநகர் டெல்லியா? அதிர்ச்சி அளிக்கும் கல்விசார் ஆய்வு!

2017 ஆண்டுக்கான இந்திய கல்வி அறிக்கை (ASER), வெளியிடப்பட்டு உள்ளது. இதில் வெளியாகி இருக்கும் தகவல்கள் பல அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் குறிப்பாக இந்திய கிராமப்புறங்களில் கல்வித்தரம் தொடா்பாக நடத்தப்பட்ட ஆய்வு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
# ஆய்வின் முடிவுகள் பின்வருமாறு, 57 சதவீத மாணவ, மாணவியர்களால் கூட்டல், கழித்தல் உள்ளிட்ட எளிய கணக்குகளுக்கு கூட விடை கண்டுபிடிக்க முடியவில்லை.
# 14 சதவீத மாணவர்களுக்கு இந்தியாவின் வரைபடமே தெரியவில்லை. 36 சதவீத மாணவ, மாணவியருக்கு நாட்டின் தலைநகர் எதுவென்று தெரியவில்லை. 
# 21 சதவீத மாணவ-மாணவியருக்கு எந்த மாநிலத்தில் வசிக்கிறோம், அது எந்த இடத்தில் இருக்கிறது என்பதை கூட கண்டுபிடிக்க முடியவில்லை.
# 40 சதவீத குழந்தைகளால் ஒரு மணி நேரத்திற்கு எத்தனை நிமிடங்கள் உள்ளது என்பதும் தெரியவில்லை. 
# சுமார் 25 சதவீத தங்களது அடிப்படை மொழிகளை வாசிக்க தெரியாதவர்களாய் உள்ளனர்.