புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 3 மே 2019 (12:17 IST)

ஓபிஎஸின் வட நாட்டு விஜயம்: அரசியல் தலைகள் கூறும் காரணங்கள் என்ன?

மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் ஓபிஎஸ் பிரச்சாரம் செய்ததும், அவர் வேட்புமனு தாக்கல் செய்யும்போது ஓபிஎஸ் உடனிருந்ததும் தெரிந்ததே. இதன் பின்னர்தான் ஓபிஎஸ் பல விமர்சனங்களுக்கு உள்ளானார். 
 
துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பாஜவுடன் மிகவும் இணக்கமாக இருப்பதால் இது குறித்து முக்கிய அரசியல் தலைகள் தங்களது கருத்தை முன்வைத்துள்ளனர். அப்படிப்பட்ட விமர்சங்களின் தொகுப்பே இது... 
 
அமமுகவின் தங்கத்தமிழ் செல்வன், ஓபிஎஸ் விரைவில் பாஜகவில் இணைந்துவிடுவார். தனது மகனுக்கு மத்திய அமைச்சர் பதவியையும், அவருக்கு ஆளுனர் பதவியும் கேட்டிருப்பதாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். 
இதனை தொடர்ந்து அவரே மீண்டும் ஓபிஎஸ் பாஜகவில் இணையப்போவதாக தவறாக சொல்லிவிட்டேன். அவர் ஏற்கனவே பாஜகவில் இணைந்துவிட்டார். அதற்காகத்தான் அவர் குடும்பத்தோடு வாரணாசி சென்றார் என கூறினார். 
 
இதனையடுத்து டிடிவி தினகரன், பன்னீர்செல்வத்தை பதவி விலக சொல்லிவிட்டு மீண்டும் போடி தொகுதியில் நிற்க சொல்லுங்கள் பார்ப்போம். பாஜகவின் ஏஜெண்டாக அவர் இருந்ததால்தான் பதவியில் இருந்து இறக்கினோம் என்று பேசி சர்ச்சையை ஏற்படுத்தினார். 
இப்போது அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜ கண்ணப்பன், காசி சென்று வந்தார் ஓபிஎஸ். கடைசி காலத்தில் போக வேண்டிய இடத்திற்கு இப்போதே சென்று வருகிறார். ஓபிஎஸ் ஒரு நம்பகத்தன்மையற்றவர். அவருக்கு டெல்லியில் ஒரு பதவி கொடுத்தால் அங்கு போய்விடுவார். 
 
ஒரு குடும்ப அரசியலுக்கு எதிர்த்து தர்மயுத்தம் நடத்திய அவர் இன்று தனது தம்பி தனது மகன் என குடும்ப அரசியல் செய்கிறார். மக்கள் மரியாதையை ஓபிஎஸ் இழந்துவிட்டார் என விமர்சித்துள்ளார். 
எப்படி பார்த்தாலும் ஓபிஎஸ் மீதான பல விமர்சனக்கள் பாஜகவோடு இணைத்தே முன்வைக்கப்படுகிறது. அதிமுகவில் பலர் இருந்தாலும் அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்தாலும் டார்கெட் என்னவோ ஓபிஎஸ்தான் போல....