குறைந்தது ஒப்போ ஸ்மார்ட்போனின் விலை: எவ்வளவு தெரியுமா?

Last Updated: சனி, 4 மே 2019 (15:44 IST)
ஒப்போ ஸ்மார்ட்போன் நிறுவனம் தனது படைப்பான ஏ3எஸ் ஸ்மார்ட்போனின் விலையை குறைத்திருக்கிறது. 

 
ஸ்மார்ட்போன்கள மீதான சலுகைகளும் தள்ளுபடிகளும் அதிகரித்து வரும் நிலையில், ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களும் ஸ்மார்ட்போன் மீதான விலையை வெளியான சில மாதங்கள் கழித்து குறைக்கின்றது. 
 
அந்த வகையில், ஒப்போ ஏ3எஸ் ஸ்மார்ட்போனின் விலையை குறைத்திருக்கிறது. ஒப்போ ஏ3எஸ் ஸ்மார்ட்போனின் 2 ஜிபி ராம் மற்றும் 3 ஜிபி ராம் ஆகிய இரு வேரியண்ட்டிற்கும் இந்த விலை குறைப்பு பொருந்தும். 
முன்னதாக ஒப்போ ஏ3எஸ் 2 ஜிபி ராம் விலை ரூ.10,990 ஆக இருந்த நிலையில், தற்போது விலை குறைப்புக்கு பின் ரூ.7,990 ஆகவும், 3 ஜிபி ராம், விலை ரூ.13,990 ஆக இருந்த நிலையில், தற்போது விலை குறைப்புக்கு பின் ரூ.9,990 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 
 
ஒப்போ ஏ3எஸ் சிறப்பம்சங்கள்:
# 6.2 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 19:9 டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 450 பிராசஸர்
# 5.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் 
# 13 எம்.பி. பிரைமரி கேமரா, 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, 8 எம்.பி. செல்ஃபி கேமரா 
# டூயல் சிம் ஸ்லாட், 4230 எம்.ஏ.ஹெச். பேட்டரி 


இதில் மேலும் படிக்கவும் :