வெள்ளி, 29 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 4 ஜனவரி 2019 (16:06 IST)

அடுத்தது அரசியலா ?- கம்பீர் விளக்கம்…

சமீபத்தில் சர்வதேசக் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் தனது அரசியல் வருகைக் குறித்து பதில் அளித்துள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாக மோசமான ஃபார்ம் காரணமாக இந்திய அணியில் இடம் கிடைக்காமல் இருந்த கவுதம் கம்பீர் சமீபத்தில் அனைத்து விதமானக் கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

அதன் பின் அவர் அளித்த பேட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, தற்போதையக் கேப்டன் கோஹ்லி மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி குறித்து விமர்சனங்களை வைத்தார். இதனால் இந்தியக் கிரிக்கெட்டில் சர்ச்சைகள் எழுந்தன.

இதையடுத்து ஓய்வுக்குப் பின்னர் கம்பீர் அரசியலுக்கு வரப் போகிறார் என்றும், பாஜக சார்பில் அவர் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் செய்திகள் உலாவர ஆரம்பித்தன. அதை உறுதி செய்யும் வகையில் பிரதமர் மோடி கம்பீரின் கிரிக்கெட் வாழ்க்கையை பாராட்டி அவருக்குக் கடிதம் அனுப்பினார். அதை டிவிட்டரில் ஷேர் செய்த கம்பீர் மோடிக்கு நன்றி தெரிவித்தார்.

இதையெல்லாம் பார்த்த ஊடகங்கள் கம்பீர் பாஜக வில் சேர்வது உறுதி என செய்திகளை வெளியிட்டனர். ஆனால் அரசியல் குறித்து இதுவரையில் எதுவும் வாய்திறக்காத கம்பீர் இப்போது முதன்முதலாக பதிலளித்துள்ளார். இதுகுறித்துத் தனது டிவிட்டரில் ‘நான் அரசியலில் சேர்வது குறித்துப் பல கதைகள் பேசப்பட்டுக் கொண்டு இருக்கின்றன. தயவு செய்து இதில் உண்மை எதுவுமில்லை என்பதை என்னை தெளிவுப்படுத்த விடுங்கள். ஒரு ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரனாக உங்கள் எல்லோரையும் போலவே இந்தியா ஆஸ்திரேலியாத் தொடரை வெல்ல வேண்டும் என்பதே என்னுடைய தற்போதைய ஆசையும்’ எனத் தெரிவித்துள்ளார்.