புதன், 18 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 3 ஜனவரி 2019 (18:39 IST)

ஜான்சன் அண்டு ஜான்சன் பொருட்கள் விற்பனையில் மரண அடி : உண்மை என்ன...?

இந்தியாவில் குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான பவுடர் எண்ணெய், சோப்பு போன்ற பொருட்களை ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனம் அதிகளவில் விற்பனை செய்து வந்தது. 
சில நாட்களுக்கு முன்பு ஜான்சன் அண்டு ஜான்சன் பவுடரில் புற்றுநோய் உண்டாக்கும் காரணிகளான ஆஸ்பெட்டாஸ் கலந்திருப்பதாகச் செய்திகள் பரவியது.
 
இதனையடுத்து இந்தியாவில்  இந்நிறுவனப் பொருட்களின் விற்பனை கடுமையான சரிவை சந்தித்ததாக தெரிகிறது. இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனம் தங்கள் பவுடர் ஆஸ்பெட்டாஸ் இல்லாதது என்றும் பாதுகாப்பானது என்று கூறியுள்ளதாக தகவல் வெளியாகின்றன.