சிட்னி டெஸ்ட் போட்டி: இரட்டை சதத்தை நெருங்கிய புஜாரா

Last Modified வெள்ளி, 4 ஜனவரி 2019 (07:28 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் சிட்னியில் நேற்று தொடங்கிய 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் நாளில் 4 விக்கெட் இழப்பிற்கு 303 ரன்கள் குவித்தது. புஜாரே 130 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்

இந்த நிலையில் இன்றும் இந்திய அணி நிதானமாக விளையாடி சற்றுமுன் வரை 5 விக்கெட் இழப்பிற்கு 389 ரன்கள் குவித்துள்ளது. புஜாரே 181 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார். விஹாரி 42 ரன்களில் அவுட் ஆகிவிட்ட நிலையில் ரிஷப் பண்ட் 27 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார்.

ஆஸ்திரேலிய அணியின் லியான், ஹாசில்வுட் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களையும், ஸ்டார்க் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :