செவ்வாய், 4 அக்டோபர் 2022
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified வெள்ளி, 6 ஜூலை 2018 (21:50 IST)

அரையிறுதிக்கு முன்னேறிய பிரான்ஸ்: முதல் தோல்வியால் வெளியேறிய உருகுவே

உலகக்கோப்பை கால்பந்து தொடரின் முதல் காலிறுதி ஆட்டத்தில் உருகுவே அணியை 2-0 என்ற கோல்கணக்கில் வீழ்த்தி பிரான்ஸ் அணி அரையிறுதிக்கு முன்னேறியது. இந்த தொடரில் ஒரு தோல்வியை கூட கண்டிராத உருகுவே முதல் தோல்வியின் மூலம் போட்டியில் இருந்து வெளியேறியது.
 
உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் முக்கிய ஆட்டங்களான காலிறுதி போட்டிகள் இன்று நடைபெறுகிறது. சற்றுமுன் முடிந்த முதல் காலிறுதி போட்டியில் பிரான்ஸ் மற்றும் உருகுவே அணிகள் மோதின
 
லீக் மற்றும் நாக் அவுட் போட்டிகளில் இரு அணிகளும் அபாரமாக விளையாடியதால் எந்த அணி வெற்றி பெற்று அரையிறுதிக்கு செல்லும் என்பதை கணிக்க முடியாத நிலை இருந்தது.
 
இந்த நிலையில் ஆட்டத்தின் 40வது நிமிடத்திலும், 61வது நிமிடத்தில் அடுத்தடுத்து இரண்டு கோல் போட்டி பிரான்ஸ் அணி வெற்றி பெற்றது. உருகுவே அணி கடைசி வரை ஒருகோல் கூட போட முடியாமல் பரிதாபமாக வெளியேறியது