4வது ஒருநாள் போட்டி: டாஸ் வென்ற நியூசிலாந்து, இந்தியா பேட்டிங்

Last Modified வியாழன், 31 ஜனவரி 2019 (07:34 IST)
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரில் ஏற்கனவே நடைபெற்ற மூன்று போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை வென்றுவிட்டது. இந்த நிலையில் இன்று ஹாமில்டன் நகரில் 4வது ஒருநாள் போட்டி இன்னும் சற்று நேரத்தில் தொடங்கவுள்ளது.

இன்றைய போட்டியில் டாஸில் வெற்றி பெற்ற நியுசிலாந்து அணி, முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளதால் இந்திய அணி பேட்டிங் செய்ய களமிறங்கியுள்ளது. சற்றுமுன் வரை இந்திய அணி இரண்டு ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 6 ரன்கள் எடுத்துள்ளது.

இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால் இன்றைய போட்டியின் கேப்டனாக ரோஹித் சர்மா செயல்படுவார். அவருடன் ஷிகர் தவான், ஷுப்மின் கில், அம்பத்தி ராயுடு, கேதார் ஜாதவ், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்ட்யா, புவனேஷ்குமார், குல்தீப் யாதவ், சாஹல், கலீல் அஹ்மது ஆகியோர் ஆடும் 11 அணியில் உள்ளனர்.இதில் மேலும் படிக்கவும் :