செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By VM
Last Modified: புதன், 30 ஜனவரி 2019 (11:48 IST)

சென்னையில் ஆங்கிலோ இந்தியரின் தலையில் கல்லைப் போட்டு கொன்ற நண்பர்!

சென்னை பெரம்பூரில் தலையில் கல்லைப் போட்டு ஆங்கிலோ இந்தியரை கொலை செய்ததாக அவரது நண்பரை போலீசார் கைது செய்தனர்.


 
சென்னை பெரம்பூர் பாக்சன் தெருவைச் சேர்ந்தவர் பிரைன் கிளார்க் (45). ஆங்கிலோ இந்தியரான இவர், சரியான வேலை இல்லாததால்  நடைபாதையில் வசித்து வந்தார்.. இந்நிலையில் பிரைன் கிளார்க் செவ்வாய்க்கிழமை காலை பாக்சன் தெருவில் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
 
இதுகுறித்து தகவலறிந்த செம்பியம் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று, பிரைன் கிளார்க்கின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
 
மேலும் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தினர். இதில், பெரம்பூர் செம்பதி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த சேகரும், பிரைன் கிளார்க்கும் நண்பர்கள் என்பதும், திங்கள்கிழமை சேகர் மது அருந்துவதற்காக பிரைன் கிளார்க்கிடம் பணம் கேட்டதாக கூறப்படுகிறது. அப்போது கிளார்க் பணம் இல்லை என மறுத்தால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது  கிளார்க், சேகரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் கிளார்க் மீது ஆத்திரத்தில் இருந்த சேகர் அன்று இரவு பிரைன் கிளார்க் வசிக்கும் பகுதிக்கு வந்துள்ளார்.  அங்கு நடை பாதையில் தூங்கிக் கொண்டிருந்த பிரைன் கிளார்க் தலையின் மீது சேகர் கல்லைத் தூக்கிப் போட்டதாக கூறப்படுகிறது இதில் பலத்த காயமடைந்த பிரைன் கிளார்க் சம்பவ இடத்திலயே இறந்துள்ளார். இது தொடர்பாக சேகரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.