தமிழகத்தை சேர்ந்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் திடீர் மரணம்!

Last Modified வியாழன், 15 ஆகஸ்ட் 2019 (22:35 IST)
தமிழகத்தை சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீர்ரும், கடந்த சில ஆண்டுகளாக கிரிக்கெட் வர்ணனை செய்து வருபவருமான விபி சந்திரசேகர் இன்று காலமானார். அவருக்கு வயது 57
தமிழக அணிக்காக ரஞ்சித் போட்டியில் விளையாடிய விபி சந்திரசேகர் அதன்பின் இந்திய அணியில் சேர்க்கப்பட்டார். அவர் இந்திய அணிக்காக 7 ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடியுள்ளார். ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அவரது அதிகபட்ச ஸ்கோர் 53 என்பது குறிப்பிடத்தக்கது.

கிரிக்கெட் விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்றவுடன் பயிற்சியாளர் மற்றும் வர்ணனையாளராக இருந்த விபி சந்திரசேகர், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மேனேஜராக முதல் மூன்று வருடங்கள் இருந்தார். மேலும் டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் விளையாடி வரும் காஞ்சி அணியின் உரிமையாளரும் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஒரு கிரிக்கெட் அகாடமியையும் நடத்தி வருகிறார்.

விபி சந்திரசேகருடன் பல போட்டிகளுக்கு வர்ணனை செய்த கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், 'விபியின் மறைவை தன்னால் நம்பவே முடியவில்லை. என்றும், அவரது மறைவு தனக்கு பேரதிர்ச்சியை அளித்ததாகவும் தெரிவித்தார். அவர் ஒரு அற்புதமான பேட்ஸ்மேன் என்றும், ஆனால் துரதிஷ்டவசமாக அவருக்கு இந்திய அணியில் அதிக வாய்ப்புகள் தரப்படவில்லை என்றும் ஸ்ரீகாந்த் தெரிவித்தார்.


இதில் மேலும் படிக்கவும் :