புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 9 ஜூலை 2019 (12:13 IST)

தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவரானார் ராகுல் டிராவிட் !

இந்திய அணியின் முன்னாள் கேப்டனான ராகுல் டிராவிட் தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டனான ராகுல் டிராவிட் ஏற்கனவே 19 வயதுக்குட்பட்டோருக்கான அணிக்குப் பயிற்சியாளராக செயல்பட்டு இந்திய அணி கோப்பையை வெல்ல பெரும்பங்கு ஆற்றினார். அதையடுத்து இப்போது அவர் தேசிய கிரிக்கெட் அகாடெமியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தப்பணிக்காக அவர் இந்தியா சிமெண்ட்ஸில் வகித்து வந்த பதவியில் இருந்து விலக வேண்டும் என உச்சநீதிமன்ற நிர்வாகிகள் குழு தெரிவித்தது. இதனையடுத்து இந்தியா சிமெண்ட்ஸ் பணியில் இருந்து விடுபட்ட டிராவிட் இந்தப்பதவியை ஏற்றுக்கொள்ள இருக்கிறார்.

இதுகுறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ‘இனி டிராவிட் அகாடெமியின் அனைத்து விதமானப் பணிகளையும் மேற்பார்வையிடுவார். குறிப்பாக அண்டர் 19 மற்றும் அண்டர் 23 ஆகிய அணிக்குப் பயிற்சி அளித்தல் மற்றும் அந்த அணிகளுக்கான வளர்ச்சித் திட்டங்களையும் மேற்பார்வையிடுவார்’ எனத் தெரிவித்துள்ளது.