1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 4 மார்ச் 2021 (16:10 IST)

டோக்கியோ ஒலிம்பிக்கில் வெளிநாட்டு ரசிகர்களுக்கு தடை!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடக்க உள்ள ஒலிம்பிக் போட்டிகளைக் காண்பதற்கு வெளிநாட்டு ரசிகர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இந்த வருடம் ஒலிம்பிக் போட்டிகள் நடக்க உள்ளன. ஜப்பானில் இப்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் போட்டிகளைப் பார்ப்பதற்கு வெளிநாட்டு ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.