வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 4 மார்ச் 2021 (15:34 IST)

வடசென்னை பார்ட் 2 எப்போது? வெற்றிமாறன் சொன்ன அதிர்ச்சி தகவல்!

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான வடசென்னை திரைப்படம் நல்ல விமர்சனங்களையும் வரவேற்பையும் பெற்றது.

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், அமீர், ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ், சமுத்திரக்கனி மற்றும் பலர் நடித்த திரைப்படம் வடசென்னை. 2018 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் நேர்மறையான விமர்சனங்களையும் நல்ல வசூலையும் பெற்றது. ஆனால் வடசென்னை மக்களை ரௌடிகள் போல காட்டியிருப்பதாக குற்றச்சாட்டுகளும் எழுந்தன.

இதையடுத்து அதன் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என்ற கேள்விக்கு சமீபத்தில் பதிலளித்த இயக்குனர் வெற்றிமாறன் ‘அந்த படம் உருவாக குறைந்தது இன்னும் இரண்டு வருடங்களாவது ஆகும்’ எனக் கூறியுள்ளார்.