ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 21 டிசம்பர் 2021 (10:23 IST)

சிறுமி பலாத்காரம்… பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் மீது வழக்குப்பதிவு!

14 வயது சிறுமி ஒருவர் அளித்த பாலியல் புகாரின் பேரில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் யாசிர் ஷா மற்றும் அவரது நண்பர் மீது வழக்குப்பதிவு செய்யப்ப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் டெஸ்ட் அணியில் இடம்பெற்றிருக்கும் சுழல்பந்து வீச்சாளரான யாசிர்ஷா மீது இஸ்லாமாபாத்தில் உள்ள காவல்நிலையத்தில் 14 வயது சிறுமி அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கில் சிறுமி அளித்த வாக்குமூலத்தில் ‘யாசிர் ஷாவின் நண்பர் பர்ஹான் என்பவர் என்னை துப்பாக்கி முனையில் பாலியல் வல்லுறவு செய்தார். இது பற்றி நான் யாசிர் ஷாவிடம் தெரிவித்த போது அவர் என்னை நக்கல் செய்தார். அதுமட்டுமில்லாமல் தனக்கும் மைனர் பெண்களைப் பிடிக்கும் என்று கூறினார். மேலும் இதை வெளியில் சொன்னால் எதிர்வினைகளை சந்திக்க வேண்டி இருக்கும் என மிரட்டினார். எனக்கு மேலதிகாரிகளிடம் செல்வாக்கு உள்ளது  என கூறி எனக்கு ஒரு பிளாட் வாங்கி தருவதாகவும்,அடுத்த 18 வருடங்களுக்கு எனது செலவை கவனித்துக் கொள்வதாகவும் கூறினார்’ என அந்த சிறுமி தெரிவித்துள்ளார்.