திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 4 டிசம்பர் 2021 (10:46 IST)

வாட்ஸ் ஆப்பில் ஆசிரியைக்கு ஆபாச மெஸேஜ் அனுப்பிய ஆசிரியர் கைது!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு பணிபுரியும் அரசு ஆசிரியைக்கு சக ஆசிரியர் ஆபாச மெஸேஜ்கள் அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

பரமக்குடி அருகே உள்ள சத்திரக்குடியில் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்துள்ளார் மலர்விழி. இதே பள்ளியில் பணியாற்றிய சந்திரன் என்பவர் செல்போன் மூலமாக வாட்ஸ்  ஆப்பில் ஆபாசமான மெஸேஜ் மற்றும் புகைப்படங்களை அனுப்பி பாலியல் ரீதியாக எல்லை மீறியுள்ளார்.

இதை மலர்விழி தன்னுடைய கணவரிடம் சொல்லி அவர் சந்திரன் மீது புகாரளித்துள்ளார். இந்த புகாரை அடுத்து சத்திரக்குடி காவல்துறையினர் சந்திரனைக் கைது செய்துள்ளனர்.