1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Namakkal teacher arrest under POCSO act

பத்தாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை! – நாமக்கல் ஆசிரியர் கைது!

Namakkal
நாமக்கலில் பத்தாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை தந்த வழக்கில் ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில காலமாக தமிழகத்தில் பள்ளிகளில் பாலியல் தொல்லைகள் மற்றும் அது தொடர்பான தற்கொலை சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்நிலையில் மாணவ, மாணவிகள் மீதான பாலியல் வன்முறைகள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நாமக்கலில் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்த மாணவிக்கு அந்த பள்ளியில் பணியாற்றும் மதிவாணன் என்ற ஆசிரியர் பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளார். இதுகுறித்து மாணவியும், அவரது பெற்றோரும் மாவட்ட கல்வி அலுவலரிடம் புகார் அளித்துள்ளனர்.

இந்த புகாரின் அடிப்படையில் மதிவாணன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் மதிவாணனால் மேலும் சில மாணவிகளும் பாலியல் தொல்லைக்கு உள்ளானதாக கூறப்படும் நிலையில் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.
அடுத்த கட்டுரையில்
2036ம் ஆண்டு வரை முன்பதிவு நிறைவடைந்தது! – சபரிமலை ஷாக்கிங் தகவல்!