திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 9 ஜூலை 2018 (22:41 IST)

தோல்வி அடைந்த பிரேசில் அணியினர்களை முட்டையால் அடித்த பொதுமக்கள்

உலகக்கோப்பை கால்பந்து போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில் நாளை பெல்ஜியம் மற்றும் பிரான்ஸ் அணியினர்களுக்கு இடையிலான அரையிறுதியும், புதன்கிழமை குரோஷியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான அரையிறுதி போட்டியும் நடைபெறவுள்ளது இந்த இரு போட்டிகளில் வெற்றி பெறும் அணி வரும் ஞாயிறு அன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் மோதும்.
 
இந்த நிலையில் சமீபத்தில் நடந்த காலிறுதி போட்டியில் உலகக்கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்த்த அணிகளில் ஒன்றான பிரேசில் அணி, பெல்ஜியம் அணியிடம் தோல்வி அடைந்து வெளியேறியது. இதனால் பெல்ஜியம் மக்கள் தங்கள் நாட்டு அணி வீரர்கள் மீது கடும் ஆத்திரத்தில் இருந்தனர்.
 
இந்த ஆத்திரத்தை இன்று பிரேசில் அணி வீரர்கள் நாடு திரும்பியபோது வெளிப்படுத்தினர். பிரேசில் அணி வீர்ர்கள் விமான நிலையத்தில் இருந்து பேருந்தில் வெளியே வந்தபோது பேருந்தை நோக்கி முட்டை மற்றும் கற்களால் வீசி தாக்கினர். இதனையடுத்து பொதுமக்களை போலீசார் கலைத்த பின்னர் வீரர்கள் சென்ற பேருந்து பாதுகாப்புடன் சென்றது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.