வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 27 ஏப்ரல் 2023 (15:00 IST)

நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து பிரபல வீரர் விலகல்

washington sundar
ஐதராபாத் அணி வீரர் வாஷிங்டன் சுந்தர் நடப்பு ஐபிஎல் தொடரின் மீதி போட்டிகளில் இருந்து விலகியுள்ளார்.

ஐபிஎல்2023 1 வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இதில், இடம்பெற்றுள்ள 10 அணிகளும் லீக் சுற்றில் விளையாடி வருகின்றன.

இத்தொடரில் ஐதராபாத் அணிக்காக தமிழகத்தைச் சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் விளையாடி வருகிறார்.

இவருக்கு தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, சன்ரைஸ் ஐதராபாத் அணி நிர்வாகம் தன் டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.