திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 21 ஏப்ரல் 2023 (20:24 IST)

ஐபிஎல் போட்டியை நேரில் கண்டுகளிக்கும் முதல்வர் முக.ஸ்டாலின்

சென்னை கிங்ஸ்- சன்ரைஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெறும் இன்றைய போட்டியைக் காண  முதல்வர் முக.ஸ்டாலின்  இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு வருகை தந்துள்ளார். 

இன்றைய போட்டியில் இரு அணிகளும் டாஸ் போட அழைக்கப்பட்ட  நிலையில், டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி பந்து வீச்சு தேர்வு செய்தார்.

எனவே, சன்ரைஸ் ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்யவுள்ளது. இன்றைய போட்டி ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், ஹைதராபாத் அணியில், புரூ, 18 ரன்களும், ஷர்மா 34 ரன்களும், திரிபாதி 21 ரன்களும் அடித்துள்ளனர். 10.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 82 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

ஆஹாஷ் சிங்கும், ஜடேஜாவும் தலார 1விக்கெட் கைப்பற்றியுள்ளனர்.

இன்றைய போட்டியைக் காண  முதல்வர் முக.ஸ்டாலின்  இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு வருகை தந்துள்ளார். அவருடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரும் இப்போட்டியயைக் கண்டு ரசித்து வருகின்றனர்.