திங்கள், 13 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: புதன், 6 பிப்ரவரி 2019 (12:57 IST)

10 ரன்னில் ஆல் அவுட்: மகளிர் கிரிக்கெட் போட்டியில் மோசமான சாதனை

உலகம் முழுவதும் தற்போது மகளிர் கிரிக்கெட் போட்டிகள் அதிகளவில் நடந்து கொண்டிருக்கும் நிலையில் நியூ சவுத்வேல்ஸ் மகளிர் அணிக்கும், ஆஸ்திரேலியா மகளிர் அணிக்கும் இடையே இன்று டி20 போட்டி ஒன்று நடைபெற்றது
 
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா மகளிர் அணி 10 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதில் ஆறு எக்ஸ்ட்ரா ரன்கள் என்பதும், தொடக்க ஆட்ட வீராங்கனை ஃபெமினா மான்செல் 4 ரன்கள் எடுத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மற்ற அனைத்து வீராங்கனைகளும் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆகினர்
 
11 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூ சவுத்வேல்ஸ் அணி 15 பந்துகளில் வெற்றிக்கான இலக்கை அடைந்தது. இந்த போட்டியில் மொத்தமே 65 பந்துகள் மட்டுமே வீசப்பட்டது. மேலும் பத்து டக் அவுட் விக்கெட்டுக்கள் மற்றும் தனி நபரின் ரன்களை விட எக்ஸ்ட்ரா ரன் அதிகம் என்ற மோசமான சாதனையும் இந்த போட்டியில் நிகழ்ந்துள்ளது.