வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 5 பிப்ரவரி 2019 (17:43 IST)

உலகக் கோப்பைக்கு யார் கேப்டன் – அறிவித்தது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் !

நிறவெறித் தாக்குதோடு தென் ஆப்பிரிக்க வீரரை திட்டிய பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ் அஹமதைக் கேப்டன் பதவியில் இருந்து நீக்க வேண்டும் எனக் குரல்கள் எழுந்துவரும் சூழலில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
 

சமீபத்தில் தென் ஆப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் இடையே நடந்த ஒருநாள் போட்டியில் விக்கெட் கீப்பிங் பணியில் இருந்த சர்பராஸ் தென் ஆப்பிரிக்கா வீரர் பெலுக்வயோவை நோக்கி ‘ “ஏய் கருப்பா, உன்னுடைய அம்மா எங்கே? உனக்காக பிரார்த்தனைச் செய்ய கூறினாயா என்ன?’ எனக் கூறினார். இந்த அறுவறுக்கத்தக்க அவரது நிறவெறித் தாக்குதல் பேச்சு ஸ்டம்ப் மைக்கின் மூலமாக வெளியேக் கேட்டு சர்ச்சைகளைக் கிளப்பியது. இதனால் ஐசிசி நிறவெறித்தடை விதிமுறையின் கீழ் சர்பராஸுக்கு  4 போட்டிகளில் விளையாடத்  தடை விதிக்கப்பட்டது. இதனையடுத்து தென் ஆப்பிரிக்காவில் இருந்து அவரை பாகிஸ்தான் திரும்புமாறு  அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் கூறிவிட்டது.

இதனையடுத்து ஐசிசி யின் நிறவெறித் தாக்குதல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. அப்படி எடுக்கப்பட்டால் சில ஆண்டுகளோ அல்லது கிரிக்கெட் விளையாட வாழ்நாள் தடையோ விதிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகின. வாசிம் அக்ரம் போன்ற முன்னாள் வீரர்கள் சர்பராஸூக்கு ஆதரவாகப் பேசினர். இதுவரையில் சர்பராஸ் மீது எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் உலகக் கோப்பை போட்டிகளில் பாகிஸ்தான் அணிக்கு கேப்டனாக சர்பராஸ்தான் இருப்பார் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் எஷான் மணி தெரிவித்துள்ளார். அவர் இதை அறிவிப்பதற்கு முன்னர் சர்பராஸை சந்தித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.