வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 30 ஜூன் 2021 (10:29 IST)

அரையிறுதிக்கு முன்னேறும் 4 அணிகள் எவை? – எதிர்பார்ப்பில் ஈரோ கால் இறுதி போட்டி!

ஈரோ உலகக்கோப்பை கால்பந்து போட்டி நாக் அவுட் சுற்றுகள் முடிந்த நிலையில் கால் இறுதி போட்டிகள் மீது எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஈரோ உலகக்கோப்பை கால்பந்து போட்டி தொடங்கி விமரிசையாக நடந்து வரும் நிலையில் நேற்றுடன் முடிவடைந்த நாக் அவுட் 16 போட்டிகளில் கால் இறுதி சுற்றுக்கு 8 அணிகள் முன்னேறியுள்ளன. ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட போர்ச்சுக்கல் அணி பெல்ஜியமிடம் தோல்வியடைந்ததால் கால் இறுதி வாய்ப்பை இழந்தது. அதேபோல நடப்பு சாம்பியனான பிரான்ஸ் அணியும் நேற்றைய நாக் அவுட் ஆட்டத்தில் ஸ்விட்சர்லாந்திடம் தோல்வியை தழுவியது.

இந்நிலையில் தற்போது கால் இறுதி போட்டியில் ஸ்விட்சர்லாந்து – ஸ்பெயின், பெல்ஜியம் – இத்தாலி, செக் குடியரசு – டென்மார்க், இங்கிலாந்து – உக்ரைன் என்ற வகையில் 8 அணிகளுக்கிடையே வெள்ளிக்கிழமை முதல் போட்டிகள் நடைபெற உள்ளன. இந்த போட்டிகளில் வெல்லும் 4 அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும்.