வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: புதன், 30 ஜூன் 2021 (00:13 IST)

அமெரிக்காவில் ரஜினிகாந்த்...புகைப்படம் வைரல்

கொரோனா தடுப்பு ஊசி செலுத்திக் கொண்ட ரஜினிகாந்த் சிறப்பு அனுமதி பெற்று உடல் பரிசோதனைக்காக தனி விமானம் மூலம் சமீபத்தில் அமெரிக்கா சென்றுள்ளார். மருத்துவ பரிசோதனை முடிந்து மூன்று வார காலம் அமெரிக்காவில் தங்கிய பின்பு சென்னை திரும்புவுள்ளதாக தகவல் வெளியானது. .

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் அவரது மகள் ஆகிய இருவரும் அமெரிக்காவில் ஒரு ஹோட்டலின் முன் நடந்து வருவது போன்ற புகைப்படம் வெளியாகி வைரலானது.
தற்போது அதேபோன்று ரஜினிகாந்தின் மற்றொரு படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

ரஜினிகாந்த் இங்கிருந்து சென்றபோது இருந்ததை விட அதிக உற்சாகத்துடனும்ம் இளமையுடனும் இப்புகைப்படத்தில் இருப்பதாக ரசிகர்கள்  கூறி வருகின்றனர்.

 
அமெரிக்கா சென்ற ரஜினியின் குறித்த அப்டேட் வேண்டுமென்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் தற்போது ரஜினியின் புகைப்படம் ஆறுதல் அளிப்பது போலுள்ளதாக ரசிகர்கள் பேசி வந்தனர்.