வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 30 ஆகஸ்ட் 2018 (15:33 IST)

டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் செய்ய முடிவு!

இங்கிலாந்து - இந்தியா அணிகள் இடையேயான 4வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது.

 
விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
 
இன்று 4வது டெஸ்ட் தொடங்கியுள்ளது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது. இந்நிலையில் இந்திய அணி 3வது டெஸ்ட் போட்டில் வெற்றியை தொடங்கியது மூலம் இம்முறை அணியில் எந்த மாற்றமும் செய்யவில்லை.
 
3வது டெஸ்ட் போட்டி ஆடிய அதே இந்திய அணி 4வது டெஸ்ட் போட்டியையும் விளையாடுகிறது.