வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 10 டிசம்பர் 2020 (17:13 IST)

பெவிலியனில் இருந்து கோட் வேர்டில் தகவல் பகிரப்பட்டதா? சிக்கலில் இங்கிலாந்து அணி!

இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான முதல் டி 20 போட்டியில் பெவ்லியனில் இருந்து தகவல்கள் பரிமாறப்பட்டதாக சொல்லப்படுகிறது.

இங்கிலாந்து – தென் ஆப்பிரிக்கா இடையேயான மூன்று ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டி சில நாட்களுக்கு முன்னர் தொடங்கியது. அதில் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. விளையாட்டு வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் இருவருக்கு கொரோனா அறிகுறிகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மீதமுள்ள போட்டிகள் ரத்து செய்யப்பட்டு தொடர் ரத்தானது.

இந்நிலையில் நடந்த டி 20 போட்டியில் இங்கிலாந்து அணி கேப்டனுக்கு பெவிலியனில் இருந்து பயிற்சியாளர் மற்றும் அணி நிர்வாகிகள் சில சங்கேத மொழியில் தகவலை பரிமாறியதாக சொல்லப்படுகிறது. இதனால் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் மீது ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.