திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 26 ஆகஸ்ட் 2021 (16:27 IST)

ஒருவழியா முதல் விக்கெட் விழுந்துருச்சு: பேர்ன்ஸ் அவுட்

ஒருவழியா முதல் விக்கெட் விழுந்துருச்சு: பேர்ன்ஸ் அவுட்
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் மூன்றாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி நேற்று படு மோசமாக விளையாடி 78 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது என்பது தெரிந்ததே 
 
நேற்றைய போட்டியில் இரண்டு பேட்ஸ்மேன்களை தவிர அனைவருமே ஒற்றை இலக்க எண்களில் அவுட் ஆகினர் என்பதும் ஜேம்ஸ் ஆண்டர்சன் மிக அபாரமாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் நேற்று தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி நேற்றைய ஆட்ட நேர முடிவில் 120 ரன்களுக்கு விக்கெட் இழப்பின்றி இருந்தது. இந்நிலையில் இன்று இரண்டாவது நாள் ஆட்டத்தை தொடங்கிய இங்கிலாந்து அணியின் முதல் விக்கெட்டை ஷமி வீழ்த்தியுள்ளார். பேர்ன்ஸ் 61 ரன்களில் அவுட் ஆகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .இருப்பினும் தற்போது இங்கிலாந்து அணி இந்திய அணியை விட 62 ரன்கள் முன்னணியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது