செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 26 ஆகஸ்ட் 2021 (16:21 IST)

இந்தியாவில் இருந்து வெளியேறியது யாஹூ: பயனாளிகள் அதிர்ச்சி

இந்தியாவில் இருந்து வெளியேறியது யாஹூ: பயனாளிகள் அதிர்ச்சி
உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான யாஹூ இந்தியாவில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளது அதன் பயனாளிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
கூகுள் நிறுவனத்திற்கு முன்பாகவே இந்தியாவில் தனது சேவையை தொடங்கியது யாஹூ நிறுவனம் என்பதும் யாஹூ நிறுவனத்தின் மெயில் பலர் அப்போது வைத்து இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் சமீபத்தில் மத்திய அரசு பிறப்பித்த புதிய சமூக வலைதள கொள்கை காரணமாக இந்தியாவில் இருந்து வெளியேறுவதாக யாஹூ நிறுவனம் தெரிவித்துள்ளது. யாஹூ மெயில் மட்டும் தொடர்ந்து இந்திய பயனாளர்களுக்கு சேவை அளிக்கப்படும் என்றும் யாஹு கிரிகெட், செய்திகள், யாஹூ பைனான்ஸ் உள்பட மற்ற அனைத்து சேவைகளும் இந்தியாவில் நிறுத்தப்படுவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது 
 
மத்திய அரசின் புதிய கொள்கைகள் தங்கள் நிறுவனத்திற்கு ஒத்து வராது என்பதால் இந்தியாவில் இருந்து வெளியேறுவதை தவிர வேறு வழியில்லை என்றும் யாகூ நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது இதனால் யாஹு பயனாளிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்