வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 25 ஆகஸ்ட் 2021 (19:35 IST)

ஆப்கன் இந்திய தூதரகத்தில் பாஸ்போர்ட்டுகள் திருட்டு: பாகிஸ்தானியர்கள் கைவரிசையா?

காபூலில் கடந்த 15ஆம் தேதி இந்திய விசா தொடர்பான அலுவலகத்திற்குள் நுழைந்து உருது பேசும் கும்பல் இந்திய விசா முத்திரையிடப்பட்ட ஏராளமான ஆப்கன் பாஸ்போர்ட்டுகளை திருடிச் சென்ற தகவல் வெளியாகியுள்ளது 
 
இந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் உருது பேசியதால் பாகிஸ்தானை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. திருடிச் சென்ற பாஸ்போர்ட்களில் உள்ள புகைப்படங்களை மாற்றி எதிர்காலத்தில் இந்தியாவிற்கு தீவிரவாதிகளை அனுப்பி வைக்கும் அபாயம் இருப்பதால் இந்த தகவல் உடனடியாக மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது 
 
இதைத் தொடர்ந்து ஏற்கனவே வழங்கப்பட்ட அனைத்து இந்திய விசாக்களும் ரத்து செய்யப்பட்டு இனி இவிசா மட்டுமே செல்லும் என்று இந்திய அரசு அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த சம்பவம் தொடர்பாக இந்தியா தற்போது வரை எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியிடவில்லை