வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 14 ஜூன் 2019 (21:59 IST)

ரூட் அபார சதம்: எளிதில் வெற்றி பெற்ற இங்கிலாந்து!

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் தொடர்ந்து வருணபகவான் வெற்றி பெற்று வந்த நிலையில் இன்று நடைபெற்ற 19வது லீக் போட்டியில் மே.இ.தீவுகள் அணியை இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வென்றது
 
இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மே.இ.தீவுகள் அணி 44.4 ஓவர்களில் 212 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பூரன் 63 ரன்களும், கெய்ல் 36 ரன்களும், ஹெட்மயர் 39 ரன்களும் ரஸல் 21 ரன்களும் எடுத்தனர். இங்கிலாந்தின் மூட் மற்றும் ஆர்ச்சர் தலா மூன்று விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.
 
இந்த நிலையில் 213 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணி 33.1 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து 213 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ரூட் அபாரமாக விளையாடி 100 ரன்கள் எடுத்தார். பெயர்ஸ்டோ 45 ரன்களும், வோக்ஸ் 40 ரன்களும் எடுத்தனர். சதமடித்த ரூட் ஆட்டநாயகன் விருதினை வென்றார். இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து 6 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் 7 புள்ளிகளுடன் நியூசிலாந்து அணி உள்ளது