வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 14 ஜூன் 2019 (20:46 IST)

செம.. ஒரே இன்னிங்ஸில் மொத்த விக்கெட்டுக்களையும் வீழ்த்தி ’வீரர் சாதனை...’

அசாம் மாநிலம் அர்பான் தத்தா மாவட்ட அளவிலான கிரிகெட் போட்டியில் ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்டுக்களையும் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார் இடதுகை பந்துவீச்சாளரான அர்பான் தத்தா என்ற வீரர்.
அசாம்  மாநில கிரிக்கெட் சங்கம் நடத்தும் மாவட்ட அளவிலான அணிகளுக்கு இடையே  நுருதின் அகமது டிராபி என்ற கோப்பைக்காக நடைபெறும் ஆட்டத்தில் சிவாசாகர் - சாரைடியோ அணிகள் மோதின.
 
இதில்  சாரைடியோ அணி பேட்டிங் செய்யும் போது சிவாசகர் அணியைச் சேர்ந்ந்த  இடது கை பந்துவீச்சாளரான அர்பன் தத்தா (25) என்பவர் 10 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
 
அவர் மொத்தம் 19 ஒவர்கள் வீசி அதில் 48 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். சாரைடியோ அணி 121 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இருப்பினும் இந்த போட்டி டிராவில் தான் முடிந்தது.
 
அர்பன் தத்தா 10 விக்கெட்டுக்களை வீழ்த்தியதற்காக அனைவரும் அவரைப் பாராட்டி வருகின்றனர்.