1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 3 ஆகஸ்ட் 2020 (11:20 IST)

அல்டிமேட்டாக தயாராகும் அயோத்தி ரயில் நிலையம்! – ரூ.104 கோடி ஒதுக்கீடு!

அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படும் பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில் அயோத்தி ரயில் நிலையத்தையும் நவீன வசதிகளுடன் கட்ட முடிவெடுக்கப்பட்டுள்ளது.

பல ஆண்டுகளாக தொடர்ந்த அயோத்தி வழக்கு நிறைவடைந்து அந்த பகுதியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. ராமர் கோவில் கட்டப்பட்ட பிற்கு அயோத்தியில் சுற்றுலா பெரும் வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அதற்கு ஏற்றவாறு அயோத்தி ரயில் நிலையத்தையும் நவீன வசதிகளுடன் கூடியதாக மாற்ற ரூ.104 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும்  அயோத்தி ரயில் நிலையத்தின் முகப்பை ராமர் கோவில் மாடலில் மாற்றியமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இது தவிர டிக்கெட் கவுண்டர்களை அதிகரித்தல், காத்திருப்பு அறைகளை அதிகரித்தல், மூன்று குளிரூட்டப்பட்ட கழிப்பறைகள், ஆண்கள், பெண்கள் தங்குமிடம் முதலியவற்றையும் ஏற்படுத்த உள்ளனர்.

இதுதவிர அயோத்தியிலும் டாக்ஸி பூத், சுற்றுலா மையம், நடை பாலங்கள், உணவகங்கள் மற்றும் விடுதிகள் போன்றவற்றை நிர்மாணித்து சுற்றுலாத்துறையை மேம்படுத்தவும் திட்டமிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.