இனிமே ஃபுல்லா மழை சீசன்தான்! – 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ள நிலையில் தமிழகத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த சில வாரங்களாக தமிழகம் முழுவதும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பரவலான மழை பெய்து வருகிறது. நேற்று சென்னையில் விடிய விடிய பல பகுதிகலில் கனமழை கொட்டி தீர்த்துள்ளது. இந்நிலையில் இரு தினங்களுக்குள்ளாக வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தெற்கு ஆந்திரா மற்றும் கர்நாடகா பகுதிகளில் ஏற்பட்டுள்ள வளிமண்டல சுழற்சியின் காரணமாக கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி பகுதியில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், மேலும் தமிழகத்தின் கடற்கரையோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களின் சில பகுதிகளில் என 17 மாவடங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்குள் மிதமானது முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.