இந்த வயதிலேயே இப்படியா ? – டிராவிட் மகன் செய்த சாதனை !

Last Modified வியாழன், 20 பிப்ரவரி 2020 (14:52 IST)

பள்ளிக் கிரிக்கெட்டில் விளையாடி வரும் ராகுல் டிராவிட்டின் மகன் சமீத் டிராவிட் கடந்த இரு மாதங்களில் இருமுறை இரட்டை சதம் அடித்துள்ளார்.

இந்திய அணியின் சுவர் ராகுல் டிராவிட்டின் மகன் சமீத் டிராவிட்டுக்கு இப்போது 14 வயது ஆகிறது. தந்தையை போலவே அவரும் கிரிக்கெட்டில் ஆர்வம் காட்ட பள்ளி அணியில் விளையாடி வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் கர்நாடக கிரிக்கெட் சங்கம் நடத்தியம் பி.டி.ஆர் ஷீல்டு போட்டிகளில் கலந்துகொண்டு வருகிறார். இதில் மல்லையாவின் அணிக்காக விளையாடும் அவர், எதிரணியான ஸ்ரீ குமரன் குழந்தைகள் அகாடமி அணிக்கு எதிராக இரட்டை சதம் அடித்துள்ளார்.

தனது தந்தை போல நிதானமாக விளையாடாமல் சமித் 146 பந்துகளில் 33 பவுண்டரிகளுடன் 204 ரன்கள் சேர்த்தார். அதோடு மட்டும் இல்லாமல் பந்து வீச்சிலும் கலக்கிய அவர் இரண்டு விக்கெட்களைக் கைப்பற்றினார். இதே போல கடந்த ஆண்டு டிசம்பர் மாதமும் அவர் இரட்டை சதம் அடித்தது குறிப்பிடத்தக்கது.இதில் மேலும் படிக்கவும் :