வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 5 பிப்ரவரி 2020 (10:59 IST)

IND vs NZ: சதம் விளாசிய கையோடு நடையை கட்டிய ஸ்ரேயாஸ் ஐயர்!!

ஸ்ரேயாஸ் ஐயர் சதம் விளாசிய கையோடு அவுட் ஆகி நடையை கட்டியுள்ளார். 
 
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே சமீபத்தில் நடைபெற்று முடிந்த டி20 தொடரில் இந்திய அணி 5-0 என்ற கணக்கில் முழு வெற்றியை பெற்றது என்பது ஏற்கனவே தெரிந்ததே.
 
இந்நிலையில் இன்று முதல் இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் ஆரம்பமாகியுள்ளது. இன்று ஹாமில்டன் மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது.
 
காயம் காரணமாக ரோகித் சர்மா, ஷிகர் தவான் விலகி உள்ளதால் இந்திய அணியில்  தொடக்க ஆட்டக்காரர்களாக ப்ரீதிவ் ஷா மற்றும் மயங்க் அகர்வால் களமிறங்கிய நிலையில் இருவரும் 20 மற்றும் 32 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தனர். 
 
இதனைத்தொடர்ந்து கேப்டன் விராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர் களமிறங்கினர். விராட் கோலி 51 ரன்களில் அவுட் ஆக, ஸ்ரேயாஸ் அய்யர் சதம் அடித்த கையோடு அவுட் ஆகினார். தற்போது ராகுல் மற்றும் கேதர் ஜாதவ் களத்தில் உள்ளனர். 
 
தற்போது வரை இந்திய அணி 45.5 ஓவர் முடிந்துள்ள நிலையில் 4 விக்கெட் இழப்பிற்கு 297 ரன்கள் எடுத்துள்ளது.