செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 9 பிப்ரவரி 2020 (09:34 IST)

சேலத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம்: முதல்வர் விழாவில் ராகுல் டிராவிட்

சேலத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம்
சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானம் தமிழகத்தில் சென்னையில் மட்டுமே இருந்து வரும் நிலையில் இன்று சேலத்தில் புதிய கிரிக்கெட் மைதானத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் திறந்து வைத்தார்
 
இந்த விழாவில் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ராகுல் டிராவிட், சீனிவாசன் மற்றும் அமைச்சர் செல்லூர் ராஜு உள்பட பலர் கலந்து கொண்டனர். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி குத்துவிளக்கேற்றி மைதானத்தில் திறந்து வைத்தபின் ராகுல் டிராவிட் இந்த விழாவில் பேசிய போது ’தமிழக கிரிக்கெட் அசோசியேசன், தமிழக அரசும் இணைந்து இந்த மாபெரும் சர்வதேச தரத்திலான மைதானத்தை உருவாக்கியுள்ளது குறித்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். சேலம், கோவை உள்ளிட்ட சுற்றுப்புறத்தில் உள்ள இளைஞர்களுக்கு இந்த மைதானம் ஒரு வரப்பிரசாதமாக வரப்பிரசாதமாக இருக்கும்
 
வருங்காலத்தில் இந்த பகுதி இளைஞர்களிடையே மிகப்பெரிய அளவில் கிரிக்கெட் விளையாட்டிற்கு வரவேற்பு இருக்கும். இந்த மைதானம் மிக சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து வசதிகளும் உருவாக்கப்பட்டுள்ளது உண்மையிலேயே மகிழ்ச்சி அடைவதாக உள்ளது. சேலத்தில் கிரிக்கெட் மைதான உருவாகியுள்ளதால்  இந்த மைதானத்தில் பல சர்வதேச போட்டிகள் நடக்கும் என்பதால் இந்த பகுதியில் வணிகமும் அதிகரிக்கும் என்று அவர் பேசினார்