ரன்னே அடிக்காமல் விழுந்தது விக்கெட்! – தொடர் சொதப்பலில் வங்கதேசம்!

india
Prasanth Karthick| Last Updated: சனி, 23 நவம்பர் 2019 (17:19 IST)
இந்தியா – வங்கதேசம் இடையே நடைபெற்று வரும் பகல் – இரவு ஆட்டத்தில் இரண்டாவதாக பேட்டிங் செய்த இந்தியா 347 ரன்களில் டிக்ளேர் செய்துள்ளது.

இந்தியா – வங்கதேசம் இடையேயான இரண்டாவது டெஸ்ட் ஆட்டம் இரவு – பகல் ஆட்டமாக நடந்து வருகிறது. நேற்று காலை தொடங்கிய ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் 106 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. தொடர்ந்து களமிறங்கிய இந்தியா 89 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 347 ரன்களை பெற்று டிக்ளேர் செய்துள்ளது.

இதில் கோலி சதம் அடித்து அணியின் ரன்ரேட்டை அதிகப்படுத்தியதுடன் இரவு – பகல் ஆட்டத்தில் சதம் அடித்த முதல் கேப்டன் என்ற சாதனையையும் படைத்தார். புஜாரா, ரஹானே ஆளுக்கொரு அரைசதம் வீழ்த்தி அணியின் வெற்றி வாய்ப்பை அதிகப்படுத்தியுள்ளனர்.

தற்போது இந்திய அணியை விட 241 ரன்கள் வித்தியாசத்தில் பின் தங்கியுள்ள வங்கதேசம் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியுள்ளது. முதல் ஓவர் முடிவதற்குள்ளாகவே ஒரு ரன் கூட எடுக்காமல் ஷ்மான் இஸ்லாம் அவுட் ஆகியுள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :