மே.இ.தீவுகளுக்கு இந்தியா கொடுத்த இலக்கு: சென்னை போட்டியில் யாருக்கு வெற்றி!

Last Modified ஞாயிறு, 15 டிசம்பர் 2019 (17:44 IST)
இந்தியா மற்றும் மேற்கு இந்திய தீவுகள் நாடுகள் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே இன்று சென்னையில் நடைபெற்று வரும் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பந்து வீச முடிவு செய்ததால், இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது
இந்த போட்டியில் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 288 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய போட்டியில் தொடக்க ஆட்டக்காரரான ரோகித் சர்மா 36 ரன்கள் எடுத்த போதிலும், கேஎல் ராகுல் மற்றும் விராத் கோலி ஆகிய இருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்

இதனை அடுத்து ஸ்ரேயாஸ் அய்யர் மட்டும் ரிஷப் பண்ட் ஆகியோர் அபாரமாக விளையாடி 70 மற்றும் 71 ரன்களை குவித்ததால் இந்திய அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. அதன் பின்னர் களமிறங்கிய கேதார் ஜாதவ் 40 ரன்களும் ஜடேஜா 21 ரன்களும் எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
இதனை அடுத்து மேற்கு இந்திய தீவுகள் அணிகளுக்கு இந்திய அணி 289 என்ற இலக்கை கொடுத்துள்ளது. இந்த இலக்கை மேற்கிந்திய தீவுகள் அணி எட்டுமா? என்பதை இன்னும் சற்று நேரத்தில் நடைபெறும் மே.இ.தீவுகள் அணியின் பேட்டிங்கில் தெரிந்துவிடும்


இதில் மேலும் படிக்கவும் :