புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. உலக கோப்பை கிரிக்கெட் 2019
Written By
Last Modified: செவ்வாய், 9 ஜூலை 2019 (09:34 IST)

இந்தியா vs நியூசிலாந்த்: பைனலுக்கு செல்லும் வெற்றி வாய்ப்பு யாருக்கு அதிகம்?

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் அரையிறுதி இன்று இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ளது. 
 
கடந்த மே மாதம் 30 ஆம் தேதி துவங்கிய உலகக்கோப்பை போட்டிகளின் லீக் முடிவடைந்து முதல் அரையிறுதி போட்டி இன்று துவங்க உள்ளது. 10 அணிகள் இடம்பெற்ற இந்த தொடரில் 4 அணிகள் அரையிறுதிக்குள் நுழைந்துள்ளன. 
 
முதல் அரையிறுதி போட்டி இன்று மான்செஸ்டரில் இந்தியா - நியூசிலாந்த் அணிகளுக்கு இடையே மாலை 3 மணியளவில் நடைபெறவுள்ளது. அந்த மைதானத்தில் இதுவரை நடந்த போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணியே வெற்றி பெற்றுள்ளது. 
எனவே, அந்த அதிர்ஷ்டம் இந்த அரையிறுதியில் இருக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அதேபோல், இரு அணிகளும் பலம் பொருந்தியுள்ளதால் போட்டி விறுவிறுப்பாகவே இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 
 
நடந்து முடிந்த உலகக்கோப்பை போட்டிகளை கணக்கில் கொண்டு பார்க்கும் போது இந்தியா - நியூசிலாந்த் அணிகள் இதுவரை 8 போட்டிகளில் மோதியுள்ளன. அதில் நியூசிலாந்த் 4 வெற்றிகளையும், இந்தியா 3 வெற்றிகளையும் பதிவு செய்துள்ளது. ஒரு போட்டி மழையால் ரத்தானது. 
 
இந்த உலகக்கோப்பையில் முதல் முறை இந்தியா - நீயூசிலாந்த் நேரடியாக மோதவுள்ளதால், அரையிறுதி அதிக எதிர்பார்ப்புகளை ரசிகர்கள் மத்தியில் கூட்டியுள்ளது.