திங்கள், 27 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 22 ஏப்ரல் 2021 (13:33 IST)

தோனி, ரோஹித் சர்மாவுக்கு அடுத்த இடத்தை பிடித்த தினேஷ் கார்த்திக்!

கொல்கத்தா அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான தினேஷ் கார்த்திக் நேற்று விளையாடிய போட்டி அவருக்கு 200வது ஐபிஎல் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னர் 200 போட்டிகளில் தல தோனி மற்றும் ரோகித் சர்மா ஆகிய இருவர் மட்டுமே கடந்திருக்கும் நிலையில் 200 போட்டிகளில் விளையாடிய மூன்றாவது வீரர் என்ற பெருமையை நேற்று தினேஷ் கார்த்திக் பெற்றுள்ளார் 
 
நேற்று சென்னை அணிக்கு எதிரான போட்டியில் 221 என்ற இலக்கை நோக்கி விளையாடிய கொல்கத்தா அணியில் இடம்பெற்றிருந்த தினேஷ் கார்த்திக் அதிரடியாக விளையாடினார். அவரது ஆட்டத்தை பார்த்த ரசிகர்கள் நிச்சயம் கொல்கத்தா அணி வெற்றி பெற்றுவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது 
 
ஆனால் தினேஷ் கார்த்திக் எதிர்பாராதவிதமாக அவுட் ஆனதை அடுத்து கொல்கத்தா அணி தோல்வி அடைந்தது. இருப்பினும் நேற்றைய போட்டி அவருக்கு 200வது போட்டி என்பது அவருக்கு பெருமைக்குரிய ஒன்றாகும். மேலும் தினேஷ் கார்த்திக் இதுவரை ஏழு ஐபிஎல் அணிகளுக்காக விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது,