தோனிக்குப் பின் ரெய்னா வேண்டாம்… கேப்டனாக இவருக்கு வாய்ப்பளிக்கலாம்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தோனிக்குப் பின் ஜடேஜாவை வழிநடத்த வைக்கலாம் என மைக்கேல் வாஹ்ன் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் மிக அதிகமாக கவனம் ஈர்க்கப்பட்ட அணிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மிக முக்கிய இடம் உண்டு. இதுவரை 3 முறை கோப்பையை வென்றுள்ள இந்த அணியை 14 ஆண்டுகளாக தோனி வழிநடத்தி வருகிறார்.
அவருக்குப் பின்னர் ஜடேஜாவுக்கு கேப்டன்சி அளிக்கலாம் என மைக்கேல் வாஹ்ன் தெரிவித்துள்ளார். இதுவரை தோனிக்குப் பின் ரெய்னா சி எஸ் கே அணியை வழிநடத்த வேண்டும் என சொல்லப்பட்டது. ஆனால் இப்போது ஜடேஜா பேடிங், பந்துவீச்சு மற்றும் பவுலிங் என மூன்றிலும் சிறப்பாக செயல்பட்டு வருவதால் அவர் மீது கவனம் அதிகமாகியுள்ளது.