1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 22 மே 2022 (14:20 IST)

குறைச்சிட்டாங்கல்ல.. இனி ஏத்துவாங்க..! – பெட்ரோல் விலை குறித்து ராகுல்காந்தி!

Rahul Gandhi
மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்த நிலையில் அதுகுறித்து ராகுல்காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கடந்த சில மாதங்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து ரூ.100க்கு மேல் விற்பனையாகி வருகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் கலால் வரியை குறைத்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள ராகுல்காந்தி “இனி நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலை ரூ.0.8, ரூ.0.3 என விலை உயரத் தொடங்கும். மத்திய அரசு மக்கலை ஏமாற்றுவதை நிறுத்த வேண்டும். கடந்த 2020ம் ஆண்டு மே மாதம் ரூ.69.50 க்கு விற்ற பெட்ரோல் தற்போது ரூ.96.7 க்கு விற்பனையாகி வருகிறது” என தெரிவித்துள்ளார்.