ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : புதன், 30 ஆகஸ்ட் 2017 (17:59 IST)

நாளைய ஒரு நாள் போட்டி, தோனிக்கு ஸ்பெஷல் போட்டி!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி நாளை தனது 300 வது ஒரு நாள் போட்டியில் விளையாடவுள்ளார்.


 
 
இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை இந்தியா ஏற்கனவே கைப்பற்றினாலும் நாளை 4 வது ஒரு நாள் போட்டி நடக்க உள்ளது. இது தோனிக்கு 300 வது ஒரு நாள் போட்டியாகும்.
 
கடந்த 2004 ஆம் ஆண்டு வங்காளதேசத்திற்கு எதிரான ஒருநாள் போட்டியில் களமிறங்கினார் தோனி. தற்போது இலங்கை அணிக்கு எதிராக தனது 300 வது போட்டியில் விளையாடயுள்ளார்.
 
இந்த சுற்றுப்பயணத்தின் கடைசி இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் இந்திய அணியின் வெற்றிக்கு உறுதுணையாக நின்றார் தோனி. எனவே, இந்த போட்டியிலும் சிறந்து விளையாடுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
 
இதற்கு முன், சச்சின் 463 போட்டிகளிலும், ராகுல் டிராவிட் 344 போட்டிகளிலும், அசாருதீன் 334 போட்டிகளிலும், கங்குலி 311 போட்டிகளிலும், யுவராஜ் சிங் 304 போட்டிகளிலும் விளையாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.