திங்கள், 30 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : செவ்வாய், 29 ஆகஸ்ட் 2017 (16:58 IST)

தோனி ஓய்வு குறித்த விவாதம்: ஷேவாக் அதிரடி கருத்து!!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, தற்போது ஒரு நாள் போட்டி மற்றும் 20 ஓவர் ஆட்டத்தில் மட்டும் விளையாடி வருகிறார். 


 
 
இதனால் அவரது உடல் தகுதி பற்றிய கேள்விகள் பல எழுந்தன. இதற்கு பதில் அளிக்கும் வகையில் இலங்கையுடன் நடந்த இரண்டாவது மற்றும் மூன்றாவது ஒரு நாள் போட்டியில் அதிரடி காட்டினார்.
 
இதையடுத்து அவரது ஓய்வு குறித்து பல சர்ச்சை விவாதங்கள் நடந்து வருகிறது. இதற்கு முன்னாள் இந்திய அணி வீரர் ஷேவாக் அதிரடியாக பதிலளித்தார்.
 
அவர் கூறியதாவது, தற்போது உள்ள சூழ்நிலையில் தோனிக்கு மாற்றாக எந்த ஒரு வீரரும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. ரி‌ஷப்பன்ட் சிறந்த வீரர்தான். ஆனால் அவர் தோனி இடத்திற்கு வருவதற்கு இன்னும் நேரம் இருக்கிறது. 
 
உலக கோப்பையில் தோனி ஆட வேண்டும். உலக கோப்பைக்கு பிறகே அவரது மாற்று பற்றி சிந்திக்க வேண்டும். தோனி ரன் எடுத்தாலும், எடுக்காவிட்டாலும் கவலைப்படக்கூடாது. 
 
மிடில் ஆர்டர் மற்றும் பின் வரிசையில் ஆடுவதில் தோனி மிகவும் அனுபவம் பெற்றவர். அவருக்கு நிகர் யாரும் இல்லை. தோனி எந்த சூழ்நிலையிலும் ஆட்டத்தின் சவாலை சந்திக்க கூடியவர் என தெரிவித்துள்ளார்.