வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Updated : செவ்வாய், 29 ஆகஸ்ட் 2017 (18:30 IST)

சேலம் மாவட்ட பள்ளி நிலை சாம்பியன்ஷிப் போட்டிகள்

சேலம் மாவட்ட விளையாட்டு சங்கம் மற்றும் டால்பின் டால்பின் விளையாட்டு அகாடமி இணைந்து மாவட்ட அளவில் விளையாட்டு போட்டிகள் நடத்தவுள்ளனர்.


 

 
சேலம் மாவட்டம் விளையாட்டு சங்கம் மாவட்ட அளவிலான சாம்பியன்ஷிப் போட்டிகளை நடத்த உள்ளது. கைப்பந்து, கால்பந்து, டென்னிஸ் மற்றும் செஸ் ஆகிய விளையாட்டு போட்டிகளை நடத்த உள்ளனர். இந்த விளையாட்டு போட்டிகள் அடுத்த மாதம் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் நடக்க உள்ளது.
 
இந்த விளையாட்டு போட்டிகள் ராயல் பார்க் மெட்ரிக் பள்ளியில் நடைபெற உள்ளது. கைப்பந்து மற்றும் கால்பந்து ஆகிய போட்டிகள் 19 வயதுக்கு உட்பட்டோர்களுக்கு மட்டும். டென்னிஸ் மற்றும் செஸ் ஆகிய போட்டிகளில் 12, 14, 17 மற்றும் 19 ஆகிய வயதுகளுக்கு உட்பட்டோர் கலந்துக்கொள்ளலாம்.
 
இந்த மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டியில் கலந்துக்கொள்ள பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்வதற்கான கடைசி தேதி நாளை 30ஆம் தேதி. மேலும் போட்டியில் விளையாட கட்டணம் செலுத்த வேண்டும்.