ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : வெள்ளி, 21 செப்டம்பர் 2018 (15:10 IST)

ஹீரோவாகும் விராட் கோலி! வைரலாகும் படத்தின் போஸ்டர்!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி சென்ற வருடம் பிரபல பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆசிய கிரிக்கெட் தொடரில் பங்கேற்காமல் ஓய்வில் இருந்து வருகிறார்.
பல்வேறு விளம்பரங்களில் நடித்து வந்தார் விராட் கோலி. தனது மனைவி அனுஷ்காவுடனும் சில விளம்பரங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது  'டிரெய்லர் தி மூவி' படத்தில் ஹீரோவாக, நடிக்கும் விராட் கோலி, போஸ் கொடுக்கும் புதிய போஸ்டர் ஒன்று வெளியாகி சமூக வலைதளங்களில் டிரெண்டாகி  வருகிறது.
 
10 வருடங்களுக்கு பிறகு மற்றொரு அறிமுகம் என்று பதிவிட்டு இந்த போஸ்டரை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் விராட் கோலி.