திங்கள், 30 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: சனி, 22 செப்டம்பர் 2018 (14:12 IST)

ஸ்டேடியத்தில் இந்திய தேசிய கீதத்தைப் பாடிய பாகிஸ்தான் ரசிகர் - குவியும் பாராட்டுக்கள்

இந்தியா - பாகிஸ்தான் அணிக்கிடையேயான ஆசிய கோப்பை கிரிக்கெட்  போட்டியில், பாகிஸ்தான் ரசிகர் ஒருவர், இந்திய தேடிய கீதத்தை பாடிய நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகிய அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை 2018 தொடர் கடந்த 15ஆம் தேதி தொடங்கியது. 
 
இந்நிலையில் கடந்த 19ஆம் தேதி நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான போட்டியில், ஆட்டம் தொடங்குவதற்கு முன் இரு நாட்டு வீரர்களும் அவரவர்களின் தேசிய கீதத்தை பாடினர்.
 
இந்தியாவின் தேசிய கீதம் ஒலித்த போது, பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்  ஒருவர் எழுந்து நின்று நம் தேசிய கீதத்தை பயபக்தியுடன் பாடினார். இவரது செயலை பலர் பாராட்டி வருகின்றனர்.