புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : திங்கள், 18 செப்டம்பர் 2017 (18:52 IST)

இப்பவும் கோலிக்கு தோனிதான் வாத்தியார்; சுனில் கவாஸ்கர்

கடினமான சூழ்நிலையில் கோலியை வழிநடத்துவது தோனிதான் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுனில் காவாஸ்கர் தெரிவித்துள்ளார்.


 

 
ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. நேற்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி தடுமாற்றதை சந்தித்தாலும் வெற்றி பெற்றது. 
 
நேற்று நடைபெற்ற ஒருநாள் போட்டியில் தோனி மற்றும் விராட் கோலி ஆகியோர் இருவரும் சாதனை படைத்தனர். தோனி நேற்று தனது 100வது அரை சதத்தை கடந்தார். விராட் கோலி தொடர்ந்து 10 போட்டிகளில் கேப்டனாக வெற்றிப்பெற்று சாதனை படைத்துள்ளார்.
 
இந்நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளதாவது:-
 
கடினமான சூழ்நிலையில் இன்னமும் கோலிக்கு தோனிதான் ஆலோசனை வழங்கி வருகிறார். ஒரு அணிக்கு விக்கெட் கீப்பர் தான் எப்போதும் சிறந்த நிலையில் இருப்பதாக நான் நினைக்கிறேன். தோனி விக்கெட் கீப்பராக இருப்பது கோலிக்கு மேலும் பலத்தை சேர்த்துள்ளது. தோனிதான் இந்திய அணிக்கு சிறந்த கேப்டன் என்றார்.