1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : ஞாயிறு, 17 செப்டம்பர் 2017 (18:32 IST)

ஆஸ்திரேலியாவை திணறவிட்ட பாண்டியா, தோனி

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சென்னையில் நடைபெறும் முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 281 ரன்கள் குவித்தது.


 

 
ஆஸ்திரேலிய அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாட இந்தியா வந்துள்ளது. ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று சென்னையில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.
 
ஆரம்பத்திலே தடுமாறிய இந்திய அணி 21.3 ஓவர் முடிவில் 87 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது. கோலி, மனிஷ் பாண்டே ஆகியோர் ரன் எதுவும் குவிக்காமல் வெளியேறினர். ஜாதவ் 40 ரன்கள் குவித்த நிலையில் வெளியேறினார். இதையடுத்து ஒருபக்கம் நிதானமாக விளையாடிய தோனியுடன், பாண்டியா ஓடி சேர்ந்தார்.
 
இருவரும் சேர்ந்து மெல்ல அணியை சரிவில் இருந்து மீட்டனர். ஒரு கட்டத்துக்கு மேல் பாண்டியா ஆதிரடியாய் ஆட தொடங்கினார். 66 பந்துகளுக்கு 83 ரன்கள் எடுத்திருந்த நிலையில் வெளியேறினார். இதையடுத்து புவனேஷ்குமார் தோனியுடன் சேர்ந்து ஆடினார்.
 
கடைசி கட்டத்தில் தோனி ரன் குவிப்பில் கவணம் செலுத்தினார். புவனேஷ்குமார் அவர் பங்குக்கு ரன்கள் குவிப்பு அதிரடியாய் இறங்கினார். 50 ஓவர் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 281 ரன்கள் குவித்தது.
 
தோனி தனது 100வது அரை சதத்தை கடந்தார். தடுமாறிய இந்திய அணி 200 ரன்களை கடந்து 281 ரன்கள் குவிக்க உதவியது தோனி மற்றும் பாண்டியாவில் சிறப்பான ஆட்டம்.