செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: திங்கள், 18 செப்டம்பர் 2017 (06:05 IST)

கார் வாங்கிய 7வது நாளில் மரணம் அடைந்த ஆஸ்திரேலிய பிகினி அழகி

ஆஸ்திரேலியாவின் பிரபல மாடல் அழகி ப்ரீகெல்லர் என்பவர் சமீபத்தில் ரூ.1 கோடி மதிப்பில் ஜிடிஆர் ஸ்போர்ட்ஸ் என்ற காரை வாங்கியிருந்தார். கார் வாங்கிய ஏழாவது நாளில் தனது சகோதரர்களுடன் வெளியே சென்ற ப்ரிகெல்லர் மீண்டும் வீடு திரும்பி கொண்டிருந்தபோது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து தலைகுப்புற விழுந்து விபத்துக்குள்ளானது



 
 
இந்த விபத்து காரணமாக திடீரென கார் தீப்பற்றியது. காருக்குள் கடுகாயம் அடைந்த ப்ரிகெல்லர் மற்றும் அவரது சகோதரர்களால் காரில் இருந்து வெளியே வர முடியவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்ததும் விரைந்து வந்த மீட்புக்குழுவினர் காரில் இருந்தவர்களை வெளியே எடுக்க முயற்சி செய்தனர்.
 
இருப்பினும் ப்ரீகெல்லம் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது இரண்டு சகோதரர்கள் படுகாயங்களும் மீட்கப்பட்டாலும் பின்னர் சிகிச்சையின் பலனின்ரி உயிரிழந்தனர். ஆசை ஆசையாய் கார் வாங்கிய ஏழாவது நாளே அழகி ப்ரிகெல்லர் உயிரிழந்தது அவரது குடும்பத்தினர் உள்பட அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது