1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 8 ஆகஸ்ட் 2017 (15:17 IST)

தோனியை சீண்டிய ஜெயவர்தனா: பதிலடி கொடுத்த ரசிகர்கள்!!

இலங்கை கிரிக்கெட் வீரர் ஜெயவர்தனா தோனியை சீண்டும் விதமாக பதிவிட்டிருந்ததற்கு தோனியின் ரசிகர்கள் தக்க பதிலடி கொடுத்துள்ளனர்.


 
 
உலகின் மின்னல் மனிதன் என கருதப்பட்ட ஜமைக்காவின் உசைன் போல்ட், தடகள வாழ்க்கைக்கு விடைகொடுத்தார். இதனால், அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக, ஜெயவர்தனா ரெஸ்பெக்ட் உசைன் போல்ட் என ட்விட்டினார்.
 
அதற்கு தோனி ரசிகர் ஒருவர், போல்டை விட வேகமான தோனியையும் மதியுங்கள் என பதிவிட்டிருந்தார். இதை கண்ட ஜெயவர்தனா தோனி பைக்கில் சென்றாரா? என கிண்டலாக பதிலளித்தார்.
 
இந்த கிண்டலுக்கு வேறு ஒரு தோனி ரசிகர், விக்கெட்டுகளுக்கு இடையே தோனி ஓடி எப்பொழுதாவது பார்த்துள்ளீர்களா? பேட்ஸுடன் வேகமாக ஓடுவது ஜோக் இல்லை என்று தக்க பதிலடி கொடுத்துள்ளார்.